கால்களால் கொடுத்த பரிசு! எழுந்து நின்று பெற்றுக் கொண்ட ரஜினி! யார் இந்த பிரனாவ்? சிலிர்க்க வைக்கும் தகவல்!

கேரள முதல்வர் பிரனாயி விஜயனுடம் செல்ஃபி எடுத்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவன் பிரனாவ் நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்திப்பு


கேரளா வெள்ள நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன் பிரனாவ் கேரள முதல்வர் பிரனாய் விஜயனுடன் எடுத்த செல்பி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் பிரனாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட கேரளா முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

மாணவன் பிரனாவுக்கு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று அவருடைய போயஸ் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மாணவன் பிரனாவை அழைத்து சுமார் அரைமணிநேரம் பேசினார்.

பின்பு பிரனாவுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.