போலீஸ் கெட்டப்பில் தெறிக்கவிடும் தலைவர்! தர்பாரின் செம வைரல் ஸ்டில்!

தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள கடற்கரை ஓரம் ஒன்றில் ரஜினி தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ரஜினி இருப்பதை அறிந்து ஏராளமானவர்கள் அவரை பார்க்க அங்கு திரண்டனர். காட்சியை முடித்துவிட்டு நடிகர் ரஜினி தனது வாகனத்தில் ஏற வந்த போது அங்கிருந்தவர்கள் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது மும்பை மாநகர காவல்துறை உடையில் நடிகர் ரஜினி செம ஸ்டைலாக இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஏராளமான புகைப்படங்கள் வெளியான நிலையில் முருகதாஸ் கெடுபிடி காட்டினார். தற்போது அதை எல்லாம் மீறி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.