தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவுடன் செம ஆட்டம் போட்ட தலைவர்! வைரல் புகைப்படம் உள்ளே!

பேட்டை படத்தினை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி ஆறு மாதம் வரை மும்பையில் நடக்க உள்ளதாம்.

கடந்த ஏப்ரல் 9ம் தேதி துவங்கிய இந்த படத்தின் பூஜை நிறைவு பெற்று தற்போது முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுகிறார். அப்படி ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் பேட்டிங் பிடிக்க நயன்தாரா அம்சமாக நின்று வேடிக்கை பார்க்க ,யோகி பாபு கீப்பிங் செய்ய என்ன என அந்த புகைப்படம் தடபுடலாக உள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் படத்தில் இந்த காட்சியை எப்படி செதுக்கி இருக்கிறார்கள் என்று.