ரூ.10 லட்சத்தில் புத்தம் புதிய வீடு! சமூக சேவகருக்கு கட்டிக் கொடுத்த லாரன்ஸ்! நெகிழ வைக்கும் காரணம்!

நடிகரும் இயக்குநருமான ராகவாலாரன்ஸ் திரையுலைகை வித்தியாசமான கதை களத்தோடு கலக்கிவருவதும் சமீபத்தில் அவரது காஞ்சனா3 படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது


அனைவரும்  திரையுலைகை தாண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் செய்து வரும் நற் செயல்கள் பல. அதில் லாரன்ஸ் தனது சொந்த செலவில் ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உதவிக்கரத்துடன் இயங்ககூடியவர் என்பது அனைவரும் அறிந்து இருப்பினும் லாரன்ஸ் சமூக செயற்பாட்டாளர் கணேசனுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பது அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது

ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் ( வயது 70) தனது சொந்த கார் மூலமாக அப்பகுதி மக்களுக்கு தனது கார் மூலமாக இலவசமாக சேவை செய்து வருபவர்., இவரது சேவை வாயிலாக 2 ஆயிரத்திற்க்கும் மேலான கர்பிணிகள் மற்றும் ஆயிரக்கணக்கான விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பாதுகாக்கபட்டது குறிப்பிடதக்கது.

கணேசன் குடும்ப சூழல் நெருக்கடியாக இருந்தாலும் அவரது சேவையை தொடர்ந்து வந்தார் , கடந்த ஆண்டு கஜா புயலில் தனது வீட்டை இழந்த கணேசனின் நிலை குறித்தும், அவரது சேவை குறித்தும் அறிந்த ராகவா லாரன்ஸ் தானாக முன்வந்து அவருக்கு சுமார் 10 லட்சம் செலவில் வீடு கட்டி தருவதற்கான வேலையை மேற்கொண்டார்.

இந்த நிலையில் அந்த வேலை பாடுகள் முடிந்தவுடன் தானே நேரடியாக அவரிடம் வீட்டின் சாவியை கொடுத்து அந்த ஊர் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.லாரன்ஸின் இந்த மனித நேயமிக்க செயலினை பாராட்டி சமூக வளைதளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன