நயன்தாரா - உதயநிதி உறவு! ராதாரவி உடைத்த அடேங்கப்பா ரகசியம்!

நயன்தாராவுக்கும் இன்னொருவருக்கும் இருக்கும் உறவு குறித்து தெரியாமல் பேசியதால்தான் தான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக நடிகர் ராதாரவி பரபரப்பாக கூறியுள்ளார்.


சேலத்தில் நடிகர் ராதாரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராதாரவி பேசியதாவது: மு க ஸ்டாலின் சந்தித்து நான் திமுகவில் சேர்ந்த போது சிலருக்குப் பிடிக்கவில்லை. அப்போதும்கூட ஸ்டாலின் மீது எனக்கு மரியாதை உண்டு. நான் திமுகவில் இருந்து நீக்கப்பட ஸ்டாலினுக்கு எந்த விதத்திலும் காரணமில்லை. 

ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான சிலர் தான் என்னை திமுகவில் இருந்து நீக்க காரணமானார்கள். அதற்கு காரணம் நடிகை நயன்தாராவுடன் ஒருவருக்கு இருந்த தொடர்பு குறித்து தெரியாமல் தான் பேசி விட்டு விட்டார் என்று அதிர வைத்துள்ளார் ராதாரவி.

ராதாரவி பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவர் ஸ்டாலின் மகன் உதயநிதி குறிப்பிட்டு தான் பேசுகிறார் என்று திரையுலகில் கூறப்படுகிறது. ஏனென்றால் உதயநிதி இரண்டு படங்களில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன.

இந்த நிலையில்தான் நயன்தாரா எனும் நடிகையை பார்க்கும்போது கூப்பிட தோன்றுவதாக ராதாரவி கூறியிருந்தார். இதனால்தான் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இவற்றை எல்லாம் முடித்து போட்டு தற்போது உதயநிதியுடன் நயன்தாராவை இணைத்து பேசியுள்ளார் ராதாரவி.