நயன்தாராவை பார்த்தால் கூப்பிட தோன்றுவது ஏன்? - ராதாரவி சற்று முன் வெளியிட்ட அதிர்ச்சி விளக்கம்!

நயன்தாராவை பார்த்தால் கூப்பிட தோன்றுவதாகவும், அப்படி கூறியது ஏன் என்றும் ராதாரவி அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி கூறியதாவது, ஒ௫ முறை மட்டுமே நயன்தாராவை பார்த்துள்ளேன், சிவகார்த்திகேயன் பார்க்க செல்லும் போது பார்த்தேன். எழு கதாநாயகிகளை தவ்றாக பேசிய போது நான் நண்பர்களாக நினைக்கும் பத்திரிக்கையாளர்களை கூட எதிர்த்தேன்.

சினிமா தொழிலாளர்களாக இருக்கட்டும் முதலாளிகளாக இருக்கட்டும் நான் பாதுகாப்பாக தான் இருப்பேன். கூப்பிடுவது கும்பிடுது என்பது முன்னாள் சபாநாயகர் டாக்டர் காளிமுத்து பேசியது. அதனை குறிப்பு எடுத்து மட்டுமே பேசியுள்ளேன் . காளிமுத்து கூறியதை மனதில் வைத்து தான் நயன்தாராவை அப்படி கூறினேன்.

யூனியனில் சிலருக்கு என்னை பிடிக்காது.அதற்காக நான் பெண்களுக்கு எதிரானவன் என்று கிடையாது. நயன்தாராவை திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிளையாக விக்னேஷ் சிவன்  இருக்கிறார். அனைவரும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் , மன வேதனை அடைந்திருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்

கமலை பற்றி நான் அதிகம் விமர்சித்து பேசுகிறேன். அதனால் தான் அவர் இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக பேசுகிறார். என்னை நீக்கும் முன்பு திமுக விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை நான். இதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு தான். இதை அரசியல் ஆக்குகிறார்கள்.

நடிகர் சங்கத்தில் நான் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். எனவே நடிகர் சங்கம் என்னை பற்றி பேசத் தேவையில்லைஅமைச்சர் ஜெயக்குமார் பேசும் அளவிற்கு நான் வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் நான் வளர்ந்துவிட்டேன் என்று தான் அர்த்தம். இவ்வாறு ராதாரவி பேசினார்.

நயன்தாரா குறித்து பேசியதற்கு வருத்தம் அளிக்காமல் காளிமுத்து பேசினார் அதனால் நான் அப்படி பேசினேன் என்று ராதாரவி கூறியிருப்பது தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் நியாயப்படுத்தும் வகையில் உள்ளது.