தெலுங்கு பேசுறவனை வந்தேறினு சொல்றானுங்க! பங்களாதேசிக்கு ஆதரவா குரல் குடுக்குறானுங்க! கிழித்து தொங்கவிட்ட ராதாரவி!

தெலுங்கு பேசுபவர்கள் வந்தேறிகள் எனக்கூறிவிட்டு வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு குரல் கொடுப்பது ஏன் என காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் ராதாரவி.


தமிழக தலைநகர் சென்னையில் மத்தியில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திட்டத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணியில் கலந்துகொண்டு நடிகர் ராதாரவி பேசினார்.  

அவர் பேசுகையில், தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்களை வந்தேறிகள் என கூறுகின்றனர். ஆனால் தற்போது வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு குரல் கொடுக்கின்றனர். என இஸ்லாமியர்களை குறிப்பிட்டார். இது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை எனவும் காரசாரமாக பேசினார்.  

அதேநேரம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நானே முஸ்லிம் மதத்திற்கு மாறுவேன் என குறிப்பிட்டு பேசினார்.  மேலும், மக்களை திசை திருப்பும் நாச வேலையில் பலர் ஈடுபடுகின்றனர். அதற்கு துணை போக வேண்டாம் என தெரிவித்தார்.