நயன்தாராவை பார்த்தால் படுக்கைக்கு கூப்பிடத்தான் தோன்றுகிறது! மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி!

நயன்தாராவை பார்த்தால் படுக்கைக்கு கூப்பிட தோன்றுகிறது என்று தான் கூறியது உண்மை என்பதால் தான் அன்றைய தினம் தனது பேச்சுக்கு கைத்தட்டல் கிடைத்ததாக நடிகர் ராதாரவி கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


எனக்கு இன்னொரு முகம் இருக்கு எனும் திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராதாரவி பேசிய தாவது:- நான் உண்மையை பேசுகிறேன் என்பதால் தான் என் பேச்சுக்கு ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். இப்போது நான் பேசும்போது பலர் கைதட்டி ரசிக்கிறார்கள். இதயே தான் அன்றும் (நயன்தாரா குறித்துப் பேசியபோது) ரசிகர்கள் செய்தார்கள். உண்மையைப் பேசினால் ரசிகர் கைத்தட்ட தானே செய்வார்கள்.

நான் யாரிடமும் ஒருபோதும் மன்னிப்பு கேட்டது இல்லை. மன்னிப்பு கேட்பது என்ற அர்த்தத்திலேயே கிடையாது. எனது பேச்சு உங்களைப் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடன் தெரிவித்தேன். எனவே நான் என் பேச்சை மாற்றி கொள்ள போவதில்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்க போகிறேன். இவ்வாறு ராதாரவி பேசினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலையுதிர் காலம் திரைப்பட செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ராதாரவி நயன்தாராவை பார்த்தால் கூப்பிட தோன்றுவதாக கூறியிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் கைதட்டி ரசித்தனர். இதைக் குறிப்பிட்டு தான் உண்மை பேசியதால் தான் அன்று கைப்பற்றியதாக ராதாரவி தற்போது மீண்டும் கூறி நயன்தாராவை வம்புக்கு இழுத்துள்ளார்.