நடிகையை நடுக் கடலில் தள்ளிவிட்ட கணவன்! பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அரங்கேறிய விபரீதம்! வைரல் புகைப்படம்!

நடிகை பிரியங்கா சோப்ராவை அவரது கணவர் நிக் ஜோனஸ் கடலுக்குள் தள்ளிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.


பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 11 வயது குறைந்தவர் ஆன அமெரிக்க நடிகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், பிரியங்கா சோப்ரா தனது 37வது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடி வருகிறார்.

தனது தாய் மது சோப்ரா உடன் காதல் தம்பதி மியாமியில் பொழுதைக் கழித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ரா சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது ‌ சிகரெட் பிடித்தால் ஆஸ்துமா வரும் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த புகைப்படம் அமைந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் பிரியங்கா சோப்ராவை நிக் ஜோனாஸ் கடலுக்குள் தள்ளுவது போல் கிளிக் செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா தண்ணீருக்குள் பெறுவதை அவரது தாய் மது சோப்ரா மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ள நிக் ஜோனஸ், தனது வாழ்க்கை யின் ஒளி விளக்கு என்று காதல் மழை பொழிந்துள்ளார்.