பெற்ற தாய் தந்தைக்கு நாசர் செய்து கொண்டிருக்கும் கொடூரம்! சகோதரர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் நடிகர் நாசர் பெற்ற தாய் தந்தைக்கு எந்தவிதமான கொடூரங்களை செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது உடன் பிறந்த சகோதரர் ஜவகர் தெரிவித்துள்ளார்.


ஜவகர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜவகர் நாசர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய நடிகராகவும் மிகப்பெரிய மேடைப் பேச்சாளராகவும் இருக்கும் நாசர் உபதேசங்கள் அனைத்தையும் ஊருக்கு மட்டுமே தெரிவிப்பதாக அவரது சகோதரர் ஜவகர் தெரிவித்துள்ளார். உடல்நிலை நலிந்து பெற்றோர் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த இருபது வருடங்களில் ஒரு சில முறை கூட வந்து அவர்களை நடிகர் நாசர் பார்த்தது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

போதாக்குறைக்கு நடிகர் நாசர் தன்னுடைய குழந்தைகளை ஒரு முறை கூட அவருடைய தாத்தா பாட்டிகள் ஆன அம்மா அப்பாவிடம் காட்டியது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்து நல்ல செல்வந்தராக இருக்கும் நாசர் பெற்ற தாய் தந்தைக்கு என்று ஒரு ரூபாய் கூட செலவழிப்பது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

செலவழிக்க கூட இல்லை என்றால் பரவாயில்லை ஆனால் பெற்ற தாய் தந்தையரை நேரில் வந்து பார்க்க கூட மனம் இல்லாமல் அவர்களை தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம் என்று நாசரை கேள்வி எழுப்பியுள்ளார் அவரது சகோதரர் ஜவகர். தற்போது வாட்ஸ் அப் வீடியோ மட்டுமே வெளியிட உள்ளதாகவும் விரைவில் செய்தியாளர்களை சந்தித்து நாசர் குறித்து புட்டு புட்டு வைக்க உள்ளதாகவும் ஜவகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் சகோதரர் சகோதரி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து தற்போது வரை நாசர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.