சூட்டிங்கின் போது நடிகையை அந்த இடத்தில் தொட்டேனா? - நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

டி.வி. நடிகை டினா தத்தாவின் பாலியல் புகாரை டி.வி. நடிகர் மோஹித் மல்ஹோத்ரா மறுத்துள்ளார்.


பிரபல டி.வி. நடிகை டினா தத்தா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது சக நடிகரான மோஹித் மல்ஹோத்ரா மீது பாலியல் புகார் தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். நெருக்கமான காட்சிகளின் போது அவர் தவறான இடங்களில் தொடுவதாகவும், நெருங்கி நடிக்கும்போது தான் சங்கடமாக உணர்வதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மோஹித் மல்ஹோத்ரா அதற்கு பதில் அளித்துள்ளார். டினா சங்கடமாக உணர்ந்தால் தன்னிடம் தெரிவித்திருக்கலாமே? ஏன் தெரிவிக்கவில்லை என மோஹித் கேள்விஎழுப்பியுள்ளார். படப்பிடிப்புத்தளத்தில் சுற்றிலும் 50 பேர் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், காமெராவில் அனைத்தும் பதிவாவதாகவும் தெரிவித்த அவர், அவற்றைக் கடந்து வேறு எதுவும் நடந்துவிட முடியாது என்றார். 

டினா கூறுவது போல எதுவுமே நடைபெறவில்லை என்ற அவர், எங்கிருந்து இந்தப் பிரச்சினை வந்தது என தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். டினா இது போன்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவித்த்துவிட்டு அது தவறு எனத் தெரியவரும் போது அதனை எவ்வாறு மாற்றிக்கொள்வார் என்றும் அவர் மோஹித் கேள்வி எழுப்பினார். 

11 ஆண்டுகளா சின்னத்திரை உலகில் இருக்கும் தான், பல்வேறு பெண்களுடன் சேர்ந்து பணியாற்றியிருப்பதாகவும், எந்தப் பெண்ணும் இதுவரை தன் மீது எந்தக் குற்றச்சாட்டும் தெரிவித்ததில்லை என்றும் மோஹித்  தெரிவித்தார். அதுவே இந்தத் துறையில் தான் நிலைத்திருக்கக் காரணமாக இருந்ததாகவும் மோஹித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.