நீ இல்லாமல் ரொம்ப கஷ்டம்..! மனைவியை நினைத்து நெகிழ்ந்து பேசிய நடிகர் மாதவன்..! உருக்கமான காரணம்!

நடிகர் மாதவன் மனைவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஆரம்ப கால கட்டத்தில் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மாதவன், மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழகத்தில் பிரபலம் ஆனார். திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் மாதவனுக்கு உண்டு 

மேடி என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மாதவன், தற்போது மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை இயக்குவது மட்டும் அல்லாமல் அதில் கதாநாயகனாக நடிக்கிறார். நம்பி நாராயணனாக மாதவனும், அவருக்கு மனைவியாக நடிகை சிம்ரனும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சூர்யாவும், இந்தி ரீமேக்கில் ஷாரூக்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர். 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இதற்கிடையே தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவன். அதில் “உன் வாழ்நாள் முழுவதும் இதே சிரிப்புடன் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்.

நமது நன்மைக்காகவும் நீ நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். ஏனா நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டம்.. நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரிதா..!” என்று குறிப்பிட்டுள்ளார்.