நடிகர் மாதவன் இந்து மத வெறியரா..? அவரே சொல்வதைக் கேளுங்க.

நடிகர்கள் ஆர்வமாக புகைப்படம் வெளியிடும்போது, அதை கொண்டாடி மட்டும் நகர்வது இல்லை மக்கள். அதில் ஏதேனும் வில்லங்க விவகாரத்தைப் புகுத்தி பிரச்சனை செய்கிறார்கள். அப்படித்தான் நடிகர் மாதவன் ஆவணி ஆவிட்டத்தை தனது வீட்டில் கொண்டாடியது குறித்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


அந்த புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக்கடவுள்கள் புகைப்படத்துடன் சிலுவையும் இருந்தது. அதைக்குறிப்பிட்டு ஒருவர், "பின்னணியில் ஏன் சிலுவை இருக்கிறது. அது என்ற கோயிலா? நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம் என்று விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கோபத்துடன் பதில் அளித்துள்ளார். அதில், "உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என நம்புகிறேன். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்காமலேயே சீக்கிய மதத்துக்கு மாறினேனா என்று கேட்டீர்கள்.

எனக்குத் தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. ஏன் உலகின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. அத்தகைய தலங்களில் இருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்தன, சிலவற்றை நானே வாங்கினேன். எனது வீட்டில் எல்லா மத நம்பிக்கையைச் சேர்ந்தவர்களும் பணியில் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்துப் படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர்.

எனது பால்ய பருவத்திலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படித் திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துபட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்றுக் கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும்" என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

சரியான பதிலடிதான் கொடுத்திருக்கிறார்.