1 கப் காஃபி மற்றும் 1 டம்ளர் டீ ரூ.78,650! ஹோட்டலில் பிரபல நடிகருக்கு கிடைத்த புது அனுபவம்!

மும்பை: ஒரு டீ மற்றும் காஃபி சாப்பிட 78,650 செலுத்தியதாக, நடிகர் கிகு சார்தா தெரிவித்துள்ளார்.


 சமீபத்தில் நடிகர் கிகு சார்தா, சண்டிகாரில் உள்ள ஒரு ஓட்டல் வாழைப்பழம் சாப்பிட்டதற்காக, ரூ.442 கட்டணம் வசூலித்ததாகக் கூறி ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். இது பரவலான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்படி அநியாய வரி வசூலிக்கும் குறிப்பிட்ட ஓட்டல் மீது மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகம் வரி விதித்து, உத்தரவிட்டது.  

இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் சுற்றுலா சென்ற கிகு சார்தா, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் டீ, காபி சாப்பிட்டதாகவும், அதன் விலை இந்தோனேசிய ரூபாய் மதிப்பில் 78,650 எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இங்குதான் ஒரு ட்விஸ்ட். இந்திய ஓட்டலில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, கொந்தளித்த அவர், இந்தோனேசிய ஓட்டலின் விலை நியாயமானதே எனக் கூறி ஆதரவு தெரிவித்துள்ளார்.  

அதாவது, அவர் குறிப்பிடும் டீ, காபி விலையை இந்திய மதிப்பிற்கு மாற்றினால் ரூ.400 வருகிறது. எனவே, இதனை பொறுத்துக் கொள்வதாக, அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். எனினும், அவரது பதிவு ட்விட்டர் வாசகர்களிடையே கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.