கார்த்தி - ராஷ்மிகா மந்தனா படத்தின் பெயர் அறிவிப்பு! என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி, இவர் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


இவர் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இறுதியாக ரவிசங்கர் இயக்கத்தில் வெளியான 'தேவ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரெமோ' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்,நடிகர் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்திற்கு 'சுல்தான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்து சில தினங்களுக்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள 'கைதி' திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஜித்து ஜோசப் தயாரித்து வரும் படத்தில் படத்தில் ஜோதிகாவிற்கு தம்பியாக நடித்துள்ளார்.