மலையாள படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் ரொமான்ஸ்! கார்த்தி எடுத்த திடீர் முடிவு!

மலையாளப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் படத்தில் நடிகர் கார்த்தியுடன் அவரது அண்ணி ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


த்ரிஷ்யம் எனும் மலையாளப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலம் ஆனவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் படத்தை தான் தமிழில் கமலை வைத்து பாபநாசம் என்று ஜீத்து ஜோசப் எடுத்தார்.

தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி நாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதே படத்தில் கார்த்யுடன் இணைந்து நடிக்க நடிகை ஜோதிகாவை இயக்குனர் ஜீத்து ஜோசப் தேர்வு செய்துள்ளார். படத்தில் நடிப்பது குறித்து ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே படத்தில் ஜோதிகா நடித்தாலும் அவர் கதாநாயகியாக இருக்க கூடாது என்று கார்த்தி நிபந்தனை விதித்துள்ளார். மேலும் அண்ணியான ஜோதிகாவுடன் நெருக்கமாக நடிக்கவும் மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அதற்கு ஏற்ற வகையில் இயக்குனர் கதையில் சில மாற்றங்களை செய்வார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் நடிப்பு தானே கார்த்தி நடித்தால் என்ன என்றும் இயக்குனர் கூறுவதாக சொல்லப்படுகிறது.

இந்தியில் பிரபல நடிகர் சல்மான் கான் தனது அண்ணன் மனைவி மலாய்க்கா அரோராவுடன் குத்தாட்டம் ஆடியதை இயக்குனர் சுட்டிக்காட்டி வருகிறாராம். ஆனால் அதெல்லாம் இங்கு ஒத்து வராது என்று கார்த்தி மற்றும் சிவக்குமார் குடும்பம் கறார் காட்டி வருகிறது.