தோர் பட நடிகர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அமெரிக்காவை சேர்ந்த நடிகர் ஐசக் காப்பி, "தோர்"என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.


42- வயதான  இவர் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த  மே  13, 2019 அன்று தற்கொலை  செய்து கொணடார்.  இதனை மே  14, 2019 - அன்று பப்ளிக் சேப்டி டிபார்ட்மென்ட்  இவரது இறப்பை உறுதி செய்து தகவலை வெளியீட்டது.

நடிகர் ஐசக் காப்பி தான் இறப்பதற்கு முன்பு அவரது இறப்பு குறித்த தகவலை சமூக வலிதளத்தில் வெளியீட்டு இருக்கிறார்.  இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாக்ஸ்டாப் என்ற  இடத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் உயிர் இழந்தார்.

இவர் பல முன்னனி ஹாலிவுட் திரைப்படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  இவர் நடித்ததில் பெரும் வெற்றியை "தோர்" என்ற திரைப்படம் பெற்றது.  இது இவருக்கு ஒரு பெரும் திருப்புமுனை என்றே கூறலாம்.

மேலும் இவர் பார்போர்ரோசா, டெர்மினேட்டர் சால்வேஷன் போன்ற திரை படங்களில் நடித்து உள்ளார். இது மட்டும் இல்லாமல், பல பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

நடிகர் காப்பி, இந்த வார தொடக்கத்தில் அதகாரபூர்வமற்ற ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியீட்டு இருந்தார்.  "கடந்த சில நாட்களாக தான் நான் என் உண்மையான சுயரூபத்தை அறிந்து கொண்டேன்.  நான் மிகவும் மோசமானவன், பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளேன். என் உடலை நானே பல முறை துன்புறுத்தியும் உள்ளேன்".  என்று மிகவும் நீளமான செய்தியை வெளியீட்டு இருந்தார். 

இது மட்டும் இல்லாமல், அமெரிக்கா ஜனாதிபதி "டொனால்ட் டிரம்ப்" -ஐ குறிப்பிட்டு "பிவார்   தி மேன் தட் ஹாஸ் நத்திங் டு லூஸ், பார் ஹி ஹாஸ் நத்திங் டு ப்ரொடெக்ட் " என்று கூறியுள்ளார்.

இதை வாக்கியம் அமெரிக்கர்களை பெரிதும் யோசிக்க வைத்துள்ளது.  பொஸிசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.