ஓராண்டு விடா முயற்சி! நெஞ்சம் மறப்பதில்லை சத்யாவை அம்மாவாக்கினார் பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்!

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையைச் சேர்ந்தவர்.


இவருக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த 2009ம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு முன்னதாக அபியும் நானும் என்ற ஒரு படத்தில் பஞ்சாப் சிங்காக நடித்திருப்பார் .அதற்குப் பிறகு பனித்துளி, தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன், நாயகி என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சென்ற வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். இவருக்கும் சீரியல் நடிகை நிஷா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமானது. நான்கு வருடங்கள் கழித்து இந்த தம்பதி தற்போது ஒரு குழந்தைக்கு பெற்றோராக உள்ளனர்.

இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை நிஷா கிருஷ்ணன். தனது சீமந்தம் நடந்து விட்டதாகவும் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.