நடிகை சினேகாவுக்கு வயிற்றில் விழுந்த மிதி! படப்பிடிப்பு தளத்தில் அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!

நடிகை சினேகாவை நடிகர் ஒருவர் மிதித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சினேகா. முன்னணி நடிகர்கள் பலருடன் சினேகா ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை காதலித்து அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் நடிப்பிலிருந்து விலகியிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார் சினேகா. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சினேகா நடித்து இருந்தார்.

இந்த நிலையில் சினேகாவின் வாழ்வில் முக்கியமான படமான புதுப்பேட்டையில் அவர் நடிகர் ஒருவரிடம் மிதி வாங்கிய சம்பவம் அண்மையில் தெரியவந்துள்ளது. அந்தப் படத்தில் விலைமாதுவாக சினேகா நடித்திருப்பார். அவரை ஒரு காட்சியில் நடிகர் பாலாசிங் மிதித்து துன்புறுத்துவார்.

இந்த காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்ட போதும் அது ஓகே ஆகவில்லையாம்.  திரும்பத் திரும்ப அந்த காட்சி எடுக்கப்படவே ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலாசிங் உண்மையிலேயே சினேகாவை வயிற்றிலேயே மிதித்தாராம். இதை அண்மையில் பேட்டி ஒன்றில் அந்த நடிகர் குறிப்பிட்டுள்ளார்.