கள்ளக் காதலி மூலம் பிரபல நடிகருக்கு 3வது குழந்தை! யார் தெரியுமா?

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலும் தென்னாப்பிரிக்கா மாடலும் நடிகையுமான கேப்ரியல்லாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

தனது காதலியை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராம்பால் அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலி கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளம் வாயிலாக அறிவித்திருந்தார்.

தற்போது அவர்களுக்கு மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வினோதமானது என்னவென்றால் இந்த குழந்தையை தனது இரு மகள்களுடன் சென்று அர்ஜுன் ராம்பால் பார்த்ததுதான்.

அர்ஜுன் ராம்பாலுக்கு மெஹர் ஜெசியா உடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 14 மற்றும் 17 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

முதல் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கேப்ரியல்லாவை  அர்ஜுன் ராம்பால் காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.