உன் மகளை கற்பழிக்கப்போகிறேன்! பிரபல நடிகருக்கு மோடி பக்தர் மிரட்டல்!

பிரபல நடிகரான அனுராக் காஷ்யப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தியுடன் புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.


பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் அண்மையில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஆரவார வரவேற்பு கொடுத்தனர். அடுத்து நடிகர் விக்ரமின் புதிய படமொன்றிலும் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிரான அனுராக் காஷ்யப் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்து பதிவுடன் புகார் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். அதில் தனது மகளை தங்கள் கட்சியின் தொண்டர்கள் அதாவது உங்கள் பக்தர்கள் ஆபாசமாக பேசி மிரட்டல் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். என் மகளை கற்பழிக்கப்போவதாக உங்கள் கட்சியின் தொண்டர் ஒருவர் மிரட்டுவதாகவும் அதில் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

இவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசனை கூறுமாறும் மோடியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வெற்றி பெற்றதை கொண்டாடும் வேளையில் தங்களை அவர்கள் மிரட்டுவதாகவும் கூறியுள்ள அனுராக் காஷ்யப், பாஜக தொண்டர்களின் ட்விட்டர் பதிவையும் இணைத்து பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருக்கும் ஆபாச வார்த்தைகளை அனுராக் காஷ்யப் நீக்கியுள்ளார்.