கசமுசா செய்துவிட்டு பார்க்கும் போதெல்லாம் ஸ்ரீதேவி காலில் விழுந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?

படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரீதேவியுடன் நெருங்கி நடித்துவிட்டு பிற்காலத்தில் அவரை பார்க்கும் போதெல்லாம் காலில் விழுந்ததாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகிற்கு சென்று வெற்றிக் கொடி நாட்டினார். அங்கு ஸ்ரீதேவியுடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் ஸ்ரீதேவியுடன் நடிக்க அவர் காலத்தில் ஏராளமான ஹீரோக்கள் போட்டா போட்டி போட்டனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் அனில் கபூர்.

   அனில் கபூருடன் இணைந்து ஸ்ரீதேவி கணிசமான படங்களில் நடித்தார். திரையில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அப்போதே மிகவும் பிரபலம். அதுவும் பாடல் காட்சிகளில் ஸ்ரீதேவி – அனில் கபூர் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் உச் கொட்டுவது வழக்கம். இதற்காகவே இருவரையும் சேர்த்து வைத்து தயாரிப்பாளர்கள் பல்வேறு படங்களை எடுத்து தள்ளினர்.   ஒவ்வொரு படத்திலும் ஸ்ரீதேவி – அனில் கபூர் இடையே நெருக்கமான காட்சிகள் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். ஆனால் பிற்காலத்தில் ஸ்ரீதேவி, அனில் கபூரின் சகோதரரான போனி கபூரை திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. போனி கபூரை திருமணம் செய்த பிறகு ஸ்ரீதேவி, அனில் கபூருக்கு அண்ணி முறையாகிவிட்டார்.

   வட மாநிலங்களை பொறுத்தவரை தாய், அண்ணி போன்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என்பது பாரம்பரியம். அவர்களை எப்போதும் பார்த்தாலும் காலில் விழும் வழக்கம் உண்டு. அந்த வகையில் தனது சகோதரரை திருமணம் செய்த பிறகு ஸ்ரீதேவியை தான் எப்போது பார்த்தாலும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவிடுவேன் என்று அனில் கபூர் கூறியுள்ளார்.அப்போது குறுக்கிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் படப்பிடிப்பு என்றால் ரொமான்ஸ் நிஜ வாழ்க்கை என்றால் சென்டிமென்டா என்று கலாய்க்க, ஆமாம் என்று கூறி அனில் கபூரும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினார்.