திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்கிற கண்டிசனுடன் அந்த நடிகைக்கு தாலி கட்டிய அந்த நடிகர் தற்போது மனைவியை அடுத்து என்ன படத்துல நடிக்கப்போறனு கேட்குற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டதாம்.
மனைவியை வைத்து செம்மையாக காசு பார்த்து கல்லா கட்டும் பிரபல நடிகர்! வாய் பிளக்கும் திரையுலகம்! கோடம்பாக்கம் கிசுகிசு!
தமிழ் சினிமா கொண்டாடிய காதல் ஜோடிகளில் இந்த ஜோடியும் ஒன்றும். நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக இருவரும் உறுதியாக நின்ற நிலையில் நடிகரின் தந்தை வடிவில் பிரச்சனை வந்தது. ஆனால் நடிகை தனது அக்காவின் மும்பை தொடர்புகள் மூலமாக கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தே காதலனை கரம் பிடித்தார் என்று நீண்ட நாட்களாக ஒரு பேச்சு உண்டு.
ஆனால் திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக நடிக்க கூடாது என்கிற கண்டிசன் தான் நடிகையை திருமணம் செய்ய நடிகர் ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம் என்றும் அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. தமிழ் திரையுலகமே திரண்டு மணமக்களை வாழ்த்த உற்சாகமாக திருமணம் நடந்தது.
இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதற்கு ஏற்ப நடிகை மறுபடியும் கதை கேட்க ஆரம்பித்தார். இதனை பார்த்து கொந்தளித்த மாமனாரை, நடிகையின் கணவர் தான் சமாதானம் செய்தாராம். இப்போதும் கூட கவர்ச்சி கூடாது, இடுப்பை காட்டக் கூடாது, முத்தக் காட்சி கிடையாது, கட்டிப்பிடி கிடையாது என ஏகப்பட்ட ரெஸ்ட்ரிக்சன்.
அனைத்தையும் ஏற்று நடிகை நடிக்க ஆரம்பிக்க, தொடர்ந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதனை நடிகையின் கணவன் நடிகரால் நம்பவே முடியவில்லை. நம்ம மனைவிக்கு இந்த வயதில் இப்படி ஒரு மார்கெட்டா என்று பிரம்மித்துப போனவர் மனைவியின் படங்களை தற்போது தானே தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.
ஒரு படத்தின் சூட்டிங் முடிந்த மறுநாள் இன்னொரு படத்திற்கு பூஜை என்கிற ரீதியில் நடிகர் தன் மனைவியை வைத்து கல்லா கட்ட ஆரம்பித்துள்ளார். ஏனென்றால் நடிகையின் படம் தியேட்டரில் ஓடுகிறதோ இல்லையே டிவியில் நல்ல மார்கெட் பின்னே டிஜிட்டல் ரைட்சில் பணம் கொட்டுகிறதாம். அதனால் தான் எதற்கு வேறு ஒருவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது சொந்த பணத்தில் மனைவியை நடிக்க வைத்து காசு பார்த்த வருகிறாராம்.