நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதியை மாற்றிய அஜித்! பிரபாஸின் சாஹோ டீசரால் பீதி !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.


அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாருடன் இயக்குனர் வினோத் இணைந்துள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஒரு குற்றமும் புரியாத மூன்று பெண்கள் பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் படுகின்றனர். அவர்களை காப்பாற்றும் வழக்கறிஞர் வேடத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை.

இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அதே மாதத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள புதிய படமான சாஹோவும் வெளியாகிறது.

தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள சாஹோ படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ஆறு கோடி முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிக அளவில் இருப்பதால் அந்தப் படத்துடன் போட்டி போட நேர்கொண்ட பார்வை படக்குழு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் அந்த தேதி குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் முடிவு செய்வார் என்றும் ஒருபுறம் கிசுகிசுக்கப்படுகிறது.