விவகாரமான மேட்டர்! பிரபல நடிகரை பிரபல நடிகை கடத்தியதன் பரபரப்பு பின்னணி!

பிரபல நடிகரை ஆள் வைத்து கடத்தியதாக பிரபல நடிகை மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


பட்டதாரி எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அபி சரவணன். இது தவிர குட்டிப்புலி, அட்டகத்தி, சாகசம் உள்ளிட்ட படங்களிலும் சரவணன் நடித்துள்ளார். பட்டதாரி படத்தில் நடித்த போது உடன் நடித்த மலையாள நடிகையாக அதிதி மேனனை சரவணன் காதலித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் சரவணன் வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த சிலர் சரவணனை மிரட்டி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு கீழே சப்தம் கேட்பதை அறிந்து சரவணன் தந்தை வந்துள்ளார்.

அதற்குள் கார் மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றது. சரவணன் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. மாறாக போன் வீட்டிலேயே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் தந்தை நேராக காவல் நிலையம் சென்றார்.

போலீசார் சரவணனை தேடி வந்த நிலையில் மாலையில்அவரே வீடு திரும்பினார். மேலும் தன்னை யாரும் கடத்தவில்லை என்று சரவணன் தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் நண்பர்கள் யார் என்கிற விவரத்தை தெரிவிக்க சரவணன் மறுத்து வருகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணனின் தந்தை தனது மகன் கடத்தப்பட்டதாக தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் சரவணனே கடத்தப்படவில்லை எனும் போது நாங்கள் என்ன செய்ய முடியும்? என போலீசார் கைவிரித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் சரவணனை கடத்தியது நடிகை அதிதி மேனனின் ஆட்கள் தான் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பட்டதாரி படததில் நடித்த போது நெருங்கிப் பழகி காதலித்த அதிதி மேனன் – சரவணன் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் அதிதி மேனன் தான் ஆட்களை வைத்து சரவணனை கடத்திவிட்டதாகவும் இதற்கு காரணம் ஒரு விவகாரமான மேட்டர் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. எனினும் காவல் நிலையத்திற்கு புகார் செல்லாத காரணத்தினால் இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.