கடந்த 5 வருடத்தில் கூகுள் ட்ரெண்டிங்கில் மாஸ்! தலயா? தளபதியா? விவரம் உள்ளே!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்களிடையே ஒரு தனி வரவேற்பு இருக்கும்.


எப்போதும் இவர்களது படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும்.

இதற்காகவே விஜய் அஜித் படங்கள் என்றாலே தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். களத்தில் இவர்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல் சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு ஏகோபித்த வரவேற்பு உள்ளது .

இவர்களது எந்த ஒரு அறிவிப்பு வந்தாலும் பேஸ்புக் ,டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் என அனைத்திலும் இவர்கள் டிரெண்ட் ஆகி விடுவார்கள். குறிப்பாக விஜய், அஜித்தின் அடுத்த படம் எப்போது, அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்ந்னிலையில் கடந்த 5 வருடத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரில் யாருடைய பெயரை ரசிகர்கள் அதிகம் தேடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக அஜித்தை விட விஜயை ரசிகர்கள் அதிகமாக தேடியுள்ளது தெரியவந்துள்ளது.