பழசை மறந்து கைகளைப் பற்றிய ரஜினி! நெகிழ்ச்சியில் கண் கலங்கிய டி.ஆர்! போயஸ் கார்டனில் உணர்ச்சிப் பெருக்கு!

தனது இளைய மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது நடிகர் ரஜினியை பார்த்து டி ராஜேந்தர் கண்கலங்கி உள்ளார்.


இயக்குனர் நடிகர் அரசியல் கட்சியின் தலைவர் என பன்முகத் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவருக்கு மூன்று வாரிசுகள். முதலாமவர் நடிகர் சிலம்பரசன். இரண்டாவதாக இலக்கியா எனும் மகள் இவருக்கு உண்டு. மூன்றாவதாகப் பிறந்தவர் தான் குறளரசன். இலக்கியாவுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் குறளரசனுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் சென்னையில் குறளரசன் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் டி ராஜேந்தர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழை டி ராஜேந்தர் கொடுத்து திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டிற்கு டி ராஜேந்தர் சென்றார்.

மகன் குறளரசனுடன் வந்த டி ராஜேந்தரை ஆரத் தழுவி ரஜினி வரவேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் டி ராஜேந்தர் கைகளைப் பற்றிக்கொண்டு வீட்டில் உள்ள அனைவரின் நலம் குறித்தும் தவறாமல் விசாரித்துள்ளார் ரஜினி. குறிப்பாக டி ராஜேந்தரின் மகள் இலக்கியா குறித்து அவர் கேட்ட போது டி ராஜேந்தர் கண் கலங்கியுள்ளார்.

இதற்கு காரணம் நடிகர் ரஜினியை டி ராஜேந்தர் மிகக் கடுமையாக அரசியல் அரங்கில் விமர்சித்து வந்தார். ஆனால் அதனை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் ரஜினி மிக இயல்பாக டி ராஜேந்தரிடம் அன்பு காட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட நெகழ்ச்சியே டி ராஜேந்தர் கண்கலங்க காரணமாகியுள்ளது. முன்னதாக விஜயகாந்தை சந்தித்த போதும் டி ராஜேந்தர் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.