தளபதி 64 செம ஹாட் அப்டேட்! விஜயுடன் மோதும் ஆக்சன் கிங் அர்ஜூன்!

நடிகர் விஜய் தற்போது அட்லீயின் இயக்கத்தில் பீகிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள தனது 64வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில்  விஜய்க்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இந்த செய்தி பற்றி படக்குழுவினர் வட்டாரத்தில் இருந்து இது வதந்தி என்று சொல்லப்பட்டு வருகிறது.  விஜய் 64 படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

அந்த வேலைகள் முடிந்தவுடன், நடிகர் விஜயின் 64 வது படத்தில் பிரீ ப்ரொடக்ஷன் வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.