தாமரையை விரும்பும் ஏ.சி. சண்முகம்! இளித்து நிற்கும் எடப்பாடி! வேலூர் வேட்பாளர் தேர்வின் பின்னணி!

எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் எதிரே மாற்றுக் கட்சியினர் வருவது தெரிந்தால், திரும்பிப் போய்விடுவார்கள் அல்லது தலையைக் குனிந்துகொண்டே நடப்பார்கள்.


ஆனால், இப்போ நடப்பது எடப்பாடி ஆட்சி. அதனால், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒன்றாக கைகோர்த்தே வருகிறார்கள். இந்த நிலையில்தான் வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் ஏற்கெனவே ஏகப்பட்ட பணத்தை இழந்துவிட்ட ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் நிற்க இருக்கிறார்.

இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடரில் துரைமுருகனும் எடப்பாடி பழனிசாமியும் உரிமையுடன் கட்டிப்பிடிப்பதைப் பார்த்து டென்ஷனில் இருக்கிறார் சண்முகம். தி.மு.க.வுடன் சேர்ந்து நாங்கள் ஆட்சியைக் கலைப்போம் என்று தினகரன் கட்சியினர் சொன்னதாலே, அந்தக் கட்சி மண்ணாகிப் போனது. இப்போது தி.மு.க.வுடன் அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இருப்பதால், இந்தத் தேர்தலில் சண்முகத்தின் வெற்றிகாக பாடுபட வாய்ப்பே இல்லை.

அதனால், பா.ஜ.க. சின்னமான தாமரையில் நிற்கலாமா என்ற சிந்தனையில் இருக்கிறாராம் ஏ.சி.சண்முகம். பா.ஜ.க. சார்பில் நின்றால் மோடியை வரவழைக்கலாம், அப்போது எடப்பாடியும் பன்னீரும் கண்டிப்பாக கஷ்டப்பட்டு உழைத்து வெற்றி தேடித் தருவார்கள் என்று நினைக்கிறார். நினைப்பெல்லாம் சரிதான் கண்ணு... ஆனா, அதுக்குள்ள துரைமுருகன் பையன் வேலையைத் தொடங்கிட்டாரே...