தமிழிசை, ஹெச்.ராஜாவுக்கு தடை போட்ட ஏ.சி.சண்முகம்! திருமாவுக்கு தடை போட்ட துரைமுருகன்!

ஒருவழியாக வேலூர் தேர்தல் இறுதிக்கட்டத்தை தொட்டுவிட்டது.


5ம் தேதி தேர்தலும் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க இருக்கிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் ராமதாஸ் கட்சியும், விஜயகாந்த் கட்சியும் களம் இறங்கி வாக்கு சேகரித்தன. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.வினர் தடை போட்டுவிட்டதாக தகவல்கள் கசிகின்றன.

முத்தலாக் மசோதாவிற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவு கொடுத்ததும், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளிக்காமல் வெளிநடப்பு செய்து முத்தலாக் மசோதா நிறைவேற காரணமாக அதிமுக செயல்பட்டது வேலூரில் இருக்கும் முஸ்லீம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால், இப்போது தமிழிசை, ஹெச்.ராஜா போன்ற பாஜக தலைவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் அது இன்னும் பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்று சொல்லப்பட்டதாம். அதனால், அதிமுக தலைமை வேலூர் பிரசாரத்தில் இறங்குவதற்கு பா.ஜ.க.வுக்கு தடை போட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதே போன்று திருமாவளவன் பிரசாரத்திற்கு வரவேண்டாம் என்று தி.மு.க. தலைமை முடிவு செய்துவிட்டதாம். தேவையில்லாமல் ஜாதி பிரச்னை ஏற்படும் என்பதால் தடை போடப்பட்டதாம்.  எப்படியோ, இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணியில் இருந்து ஆளுக்கொரு கட்சியை தள்ளிவைத்து தேர்தலை சந்திக்கின்றனர். 

பார்க்கலாம்.