காரில் ஏசி போட்டு தூங்கிய நபர்! சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்! பதற வைக்கும் காரணம்!

காரில் ஏசி போட்டு தூங்கிய நபர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன். 44 வயதான இவர், ரகுபதி நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் முத்துக்கவுண்டன்பாளையம் அருகே காரில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், உயிரிழந்தார்.

இதுபற்றி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அனந்த கிருஷ்ணன், காரிலேயே ஏசியை ஆன் செய்துவிட்டு, உறங்கியதும், அப்போது காரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு அவரது மூச்சில் கலந்து, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை குறைத்து, மூச்சுத்திணறல் ஏற்படுத்திவிட்டதும் தெரியவந்தது.

இதன்காரணமாக, அவர் உயிரிழந்திருக்கிறார் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காரில் ஏசி போட்டுவிட்டு, படுத்து உறங்க வேண்டாம் என, பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.