ஏன் வெடித்து சிதறியது ஏசி? 3 பேர் பலியாக என்ன காரணம் தெரியுமா? அதிர வைக்கும் தகவல்!

நள்ளிரவில் திடீரென ஏசி வெடித்துச் சிதறியதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த தற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது காவேரிப்பாக்கம். இங்கு லேத் பட்டறை வைத்துள்ள ராஜு என்பவர் சுப்புராய பிள்ளை வீதியில் குடும்பத்தினருடன் வசித்து. மூத்த மகன் கோவர்தன்  திருமணமாகி மனைவியுடன் வீட்டில் தனி அறையில் இருக்கிறார். இளைய மகன் கவுதமுக்கு இன்னும் 20 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில்தான் வீட்டின் ஒரு அறையில் ராஜு அவரது மனைவி மற்றும் மகன் கவுதம் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏசி வெடித்துச் சிதறி அதைத்தொடர்ந்து தீப்பற்றி அறை முழுவதும் பரவியது. ஏசி வெடித்தவுடன் புகை மண்டலம் சூழ்ந்த காரணத்தினால் மூன்று பேராலும் உடனடியாக அறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. சத்தம் கேட்டு தனது அறையிலிருந்து வெளியே வந்தார் மூத்த மகன் கோவர்த்தனம் கூட தீயின் உக்கிரம் காரணமாக அறைக்குள் நுழைய முடியவில்லை.

இதனால் ராஜு அவரது மனைவி மற்றும் மகன் கவுதம் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இதற்கு முன்பாக ஏசியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு அதன் மூலமாக தீப்பிடித்து விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஏசி வெடித்துச் சிதறியது அனைத்து தரப்பினரையும் அதிரவைத்துள்ளது. காரணம் தற்போது பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் ஏசியை பயன் படுத்தி வருகின்றனர்.

இப்படி திடீரென இயேசு வெடிப்பதற்கான காரணம் என்ன என்று நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது திடுக்கிட வைப்பதாக. ஏசியை குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். இந்த சர்வீஸ் செய்பவர்கள் நிபுணர்களாக இருப்பது அவசியம். தானும் சர்வீஸ் செய்கிறேன் என்று சிலர் வந்து இயேசுவை புடைத்து மட்டும் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர்.

இவர்களைப் போன்றவர்களால் தான் ஏசியிலுள்ள கம்ப்ரஸரில் பிரச்சனை வருகிறது. ஏசியின் கம்ப்ரஸர் அதிகம் சூடாகும் போது தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. முறையாக சர்வீஸ் செய்யப்படாத ஏசி கம்ப்ரஸர் முறையாக வேலை செய்யாது. அதிகம் சூடாகும்.

இப்படி சூடு அளவுக்கு அதிகமாகும் போது ஏசியிலுள்ள கம்ப்ரஸர் வெடித்துச் சிதறிவிடும். இது போன்றதொரு விபத்துதான் திண்டிவனம் அருகே காவேரிப்பாக்கம் ராஜூ வீட்டில் ஏற்பட்டு மூன்று பேர் பலியாக காரணமாகியுள்ளது. எனவே திறமையான ஏசி மெக்கானிக் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏசி சர்வீஸ் செய்வது நல்லது.

More Recent News