104 வயதில் கணவன் திடீர் மரணம்! தகவல் கேட்ட அடுத்த நிமிடம் உயிரை விட்ட100 வயது மனைவி! புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!

100 வயதை கடந்த தம்பதி இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சோகம் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற விவசாயிக்கு 104 வயது ஆனது. இவருக்கு 100 வயது நிரம்பிய பிச்சாயி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். மொத்தம் 24 பேரக்குழந்தைகளும் உள்ளனர். 

கடந்த சில வருடங்களாக வெற்றிவேல் உடல்நலக்குறைவு காரணமாக, விவசாயத்தை கைவிட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை உடல்நலம் மிகவும் குன்றியறை அடுத்து உயிரிழந்தார். இவருக்கான இறுதி சடங்கு வேலைகளை மகன்கள் செய்து வந்தனர். அப்போது கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி பிச்சாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

ஒரே நாளில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அறிந்த ஊர் மக்கள் இறப்பிலும் பிரியாமல் சென்று விட்டனர் என சோகத்துடன் தெரிவித்தனர்.