மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பாராட்டியுள்ளார்.
ஆஸி., கேப்டன் ஆரோன் பிஞ்சுக்கு தோனி - கோலி கொடுத்த செம பரிசு! இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளுது!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் அந்த அணி கைப்பற்றி அசத்தியது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆரோன் பின்ச்.
தொடர் முடிந்து திரும்பிச் செல்லும்போது அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஆகியோர் தங்களது ஜெர்சிகளை அன்பு பரிசாக கொடுத்து அனுப்பினர். தற்போது அந்த இரு ஜெர்சிகளை தன் கையால் பிடித்தபடி எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை ஆரோன் பின்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அனைத்து காலத்திலும் சிறந்தவர்களாக போற்றப்படும் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நன்றி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஞ்ச் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு வீரர்களுடன் விளையாடிய தருணங்கள் சிறப்புமிக்கவை என்றும் அந்த நேரங்கள் தனக்கு கிடைத்ததற்காக பெருமை கொள்வதாகவும் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். இவரது புகைப்படம் மற்றும் பதிவை சமூக வலைதளவாசிகள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.