லேப் டாப்பில் பேஸ்புக் தோழிகள் 60 பேரின் ஆபாச படம்! போலீசாரையே அதிர வைத்த பொள்ளாச்சி இளைஞன்!

பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி சுமார் 60 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நான்கு பேர் கொண்ட கும்பலில் மூன்று பேர் போலீசிடம் சிக்கியுள்ளனர்.


பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பேஸ்புக் மூலம் திருநாவுக்கரசு எனும் இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். விலை உயர்ந்த கார், லேட்டஸ்ட் மொபைல், ஸ்டைலான போட்டோ போன்றவற்றை திருநாவுக்கரசு பேஸ்புக்கில் அப்லோட் செய்து வந்துள்ளார்.

இதனை எல்லாம் உண்மை என்று நம்பி திருநாவுக்கரசிடம் அந்த கல்லூரி மாணவி சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளார். மயக்கும் வகையிலான சாட்டிங் மந்திரத்தால் மாணவியை மசிய வைத்து திருநாவுக்கரசு செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.

பின்னர் செல்போனில் பேச ஆரம்பித்த நிலையில் மாணவிக்கு திருநாவுக்கரசு காதல் வலை வீசியுள்ளார். இதனை உண்மை என்று நம்பி திருநாவுக்கரசை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பித்துள்ளார் கல்லூரி மாணவி.

இதற்காகவே காத்திருந்த திருநாவுக்கரசு மாணவியை வெளியே செல்லலாம் என்று அழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற மாணவியை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுள்ளார் திருநாவுக்கரசு.

அப்போது காரில் மேலும் இரண்டு பேர் இருக்க, அவர்கள் யார் என மாணவி கேட்டுள்ளார்.அதற்கு தனது நண்பர்கள் என திருநாவுக்கரசு பதில் சொல்லியுள்ளார். காரில் சென்று கொண்டிருக்கும் போதே மாணவியிடம் சில்மிஷத்தை ஸ்டார்ட் செய்துள்ளார் திருநாவுக்கரசு.

முதலில் காதலன் தானே சீண்டட்டும் என்று விட்டுள்ளார் மாணவி. ஆனால் ஒரு கட்டத்தில் திருநாவுக்கரசு மாணவியின் ஆடைகளை களைய ஆரம்பிக்க அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது திருநாவுக்கரசு செய்த சில்மிஷங்களை காரின் முன்பகுதியில் இருந்த நபர் செல்போனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டுள்ளார. உடனே மாணவியை மிரட்டிய மூன்று பேரும் அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு விரட்டியுள்ளனர்.

மேலும் நடந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் சில்மிஷ வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றிவிடுவதாக திருநாவுக்கரசு மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன மாணவி நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

பதறிப்போன தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியுடன் திருநாவுக்கரசு சாட்டிங் செய்த விவரங்களை சேகரித்த பொள்ளாச்சி போலீசார், ஐ.பி அட்ரஸ் மூலம் அவனது இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். ஆனால் திருநாவுக்கரசு எஸ்கேப் ஆகிவிட்டான்.

இருந்தாலும் அவனது லேப்டாப்பை சோதனை செய்த போது கல்லூரி மாணவியை போன்றே வேறு பல பெண்களும் திருநாவுக்கரசிடம் சேட்டிங் செய்து ஏமாந்தது தெரியவந்தது. மேலும் அவனது லேப்டாப்பில் சுமார் 60 இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் நண்பர்கள் சதீஷ், சபரீசன், வசந்த குமார் போலீசில் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் கும்பலாக சேர்ந்து இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

இதனை அடுத்து அவர்களை சிறையில் அடைத்த போலீசார் திருநாவுக்கரசை தேடி வருகின்றனர். பெண்களை பெற்றோரை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.