புகைக்கும் போது வெடித்த சிகரெட்! முகம் சிதறி செத்த இளைஞர்!

இ-சிகரெட் வெடித்ததால், ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிகரெட் குடிப்பதால், உடலுக்கு பலவித நோய்கள் ஏற்படுவதால், பலரும் சிகரெட் பழக்கத்தை கைவிட முயற்சித்து வருகின்றனர். அதில் பலரால் வெற்றி பெற முடிவதில்லை.

 

இந்நிலையில், உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், -சிகரெட் என்ற எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் புதுவித சிகரெட் தற்போது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

 

பார்ப்பதற்கு, பேனா குச்சி போல இருக்கும் இதனை வேண்டிய நேரத்தில், பற்ற வைத்து புகைக்கலாம்இந்த சிகரெட்டை வாங்கி குடிக்க முயன்ற ஒருவர் திடீரென வெடித்ததால், உயிரிழந்துள்ளார்

 

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நபரின் பெயர் வில்லியம் பிரவுன். இவர், -சிகரெட் உள்ளிட்ட பொருட்களை விற்கும் கடை ஒன்றில், தனக்குப் பிடித்தமான -சிகரெட்டை வாங்கியுள்ளார்.

 

பின்னர், அந்த கடையின் வாசலிலேயே நின்று அதை பற்ற வைத்துள்ளார். ஆனால், திடீரென -சிகரெட் அவரது முகத்திலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

 

இதில், -சிகரெட்டின் பேனா பகுதி உடைந்து, அதில் ஒரு பகுதி, அவரது கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக்குழாயை கிழித்து, உள்ளே நுழைந்துவிட்டது. இதையடுத்து, சுயநினைவின்றி கீழே விழுந்த அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

ஆனால், அவரது தொண்டையில் இருந்து -சிகரெட் துண்டை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வில்லியம் பிரவுன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் -சிகரெட் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.