அவன் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வையுங்க! டவரில் ஏறி இளைஞன் நடத்திய விபரீத போராட்டம்!

இன்னொருவரின் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி சென்னையில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி விபரீத போராட்டம் நடத்தினார்.


பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையம் ஒரு செல்போன் டவர் உள்ளது. அந்த டவர் மீது முரளி என்கிற இளைஞர் திடீரென ஏறினார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மிரட்டினார்.

தகவல் அறிந்து அந்த பகுதிக்கு உடனடியாக போலீசார் வந்தனர். அவனிடம் ஏன் தற்கொலை செய்து கொள்ளப்போகிறார் என்று போலீசார் கேட்டனர். அதற்கு தன்னை சாவித்ரியுடன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சேர்த்து வைக்குமாறு முரளி கூறினார்.

சரி சாவித்தி யார் என்று போலீசார் கேட்க அதற்குமுரளி சொன்ன பதில் அவர்களுக்கு நெஞ்சுவலியையே ஏற்படுத்தியது. ஏனென்றால் பாலமுருகனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனைவி தான் சாவித்ரி என்று ஒரே போடாக போட்டார் இளைஞர் முரளி.

பின்பு ஒரு வழியாக நிதானத்திற்கு வந்த போலீசார் முரளியிடம் கெஞ்சி கூத்தாடி கீழே இறக்கினர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் பாலமுருகன் மனைவி சாவித்ரியுடன் இளைஞர் முரளிக்கு தகாத உறவு வந்துள்ளது. கணவனுக்கு இந்த விஷயம் தெரிந்த காரணத்தினால் முரளியுடன் பேசுவதை சாவித்ரி நிறுத்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட கடுப்பு காரணமாகவே சாவித்ரியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கோரி இளைஞர் முரளி போராட்டம் நடத்தியுள்ளார். பின்பு அந்த இளைஞனுக்கு புத்திமதி சொல்லி போலீசார் அனுப்பி வைத்தனர்.