3 வயது மகன் முன்பு துடிக்க துடிக்க தாய் கொடூர கொலை! ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்!

நாகை அடுத்த வேளாங்கண்ணி அருகே பூ வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரவுடி அது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதால் பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.


வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்த ஆனந்தவேலன் லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி சரண்யா பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களது மகனுக்கு வயது 3.

 

அதே வட்டாரத்தைச் சேர்ந்த ரவுடியான திருட்டுக்குமார் என்ற கணேஷ்குமார் மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்ளன. அந்த நபர் சரண்யாவிடம் அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

 

இது குறித்து சரண்யா தனது தனது கணவர் ஆனந்தவேலனிடம் தெரிவித்ததையடுத்து அவர் நண்பர்களுடன் சென்று கணேஷ்குமாரை கண்டித்தார். வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார்

 

இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார் நேற்று முன்தினம் சரண்யா வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அங்கு வந்தான். ஆனந்தவேலனின் ஆட்டோவை அடித்து நொறுக்கிய அவன் அதற்குப் பிறகும் ஆத்திரம் அடங்காமல் குழந்தையின் கண்முன்பே சரண்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினான்.

 

சரண்யா ரத்தவெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து கணேஷ்குமார் தப்பியோடினான். மனைவி இறந்த தகவல் அறிந்து வந்த ஆனந்த வேலனும், அவரது தாயும் குழந்தையை அணைத்துக்கொண்டு கதறியது பரிதாபமாக இருந்தது.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை தேடிவந்தனர். இந்நிலையில் தனது வீட்டிலேயே பதுங்கியிருந்த அவனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்