உல்லாசமாக இருக்க குழந்தை இடைஞ்சல்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை தாய் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி உமர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் கூலி தொழிலாளி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த  நளினி என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடடைபெற்றது.

இவர்களுக்கு 6 மற்றும் 5 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒன்றரை வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களக கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அப்போது நளினிக்கு வேலை செய்யும் இடத்தில் முரளி என்பவர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு பின்னர் கள்ளக் காதலாக மாறியது. இதனால் கணவன் மனைவிக்கு இடையில் மீண்டும் பிரச்சனை அதிகரித்ததால் நளினி மூத்த மகன் ஜீவித் குமாரை கணவரிடம் விட்டு விட்டு கள்ளக் காதலன் முரளியுடன் தனது மற்ற இரண்டு குழந்தைகளை அழைத்து வாணியம்பாடி திரும்பியுள்ளார்.

அங்குள்ள பெருமாள் பேட்டை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து கள்ளக்காதலன் முரளியுடன் சேர்ந்து நளினி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நளினியின் ஒன்றரை வயது மகள் ரித்திகா வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது.

 ரித்திகாவை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது சடலமாக இருந்ததாக கூறி நாடகமாடி  குழந்தையை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கே பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து உள்ளதாக கூறினார். 

குழந்தையின் உடல் முழுவதும் உள்ள காயங்களை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  இதனை தொடர்ந்து நளினி மற்றும் கள்ளக்காதலன் முரளியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 அப்போது தாங்கள் உல்லாசமாக இருக்க ஒன்றரை வயது குழந்தை இடையூறாக இருந்தாக நளினி கூறியுள்ளார். இதனால் கள்ளக் காதலன் முரளியுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொன்றதாக இரக்கமே இல்லாமல் கூறியுள்ளாள் நளினி.

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.