ஏகப்பட்ட ஆண்களுடன் தகாத உறவு! இடையூறாக இருந்த மகளுக்கு தாயால் நேர்ந்த கொடூரம்!

ஏகப்பட்ட ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்த சேலத்தை சேர்ந்த பெண் தனக்கு இடையூறாக இருப்பதாக கருதி பெற்ற மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய போது சிக்கியுள்ளாள்.


சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள இலுப்ப நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் குடும்ப கஷ்டத்திற்காக சிங்கப்பூர் சென்று அங்கு சம்பாதித்து தனது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் மாதம் பணம் அனுப்பி வந்துள்ளார். கணவர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் மனைவி பிரியங்காவிற்கு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

 

   தான் வேலைக்கு செல்லும் இடத்தில் பழக்கமான ஆண்கள் மற்றும் வீட்டுக்கு அருகே உள்ள இளைஞர்களுடன் பிரியங்காவிற்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் காலம் பார்க்காமல் அவர்களுடன் செல்போனில் பேசுவதை பிரியங்கா வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் தந்தையிடம் பேசிய 4 வயது குழந்தை தாய் பிற ஆண்களுடன் பேசுவதை எதேச்சையாக கூறியுள்ளார்.

 

   இதனால் கணவர் சிவசங்கர் மனைவி பிரியங்கா இடையே சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் தானும் தனது மகளும் வங்கிக்கு சென்று பணம் எடுத்து திரும்பி வந்த போது கொள்ளையர்கள் தங்களை தாக்கி கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றதாகவும் தான் கிணற்றில் விழுந்தாலும் பிழைத்துக் கொண்டதாகவும், மகள் உயிரிழந்துவிட்டதாகவும் பிரியங்கா கூறியுள்ளார்.

 

   ஆனால் பிரியங்கா கூறுவது சினிமா கதை போல் உள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போது தான் பிரியங்காவிற்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும் கடந்த வாரம் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பிரியங்காவை விசாரிக்கும் முறையில் போலீசார் விசாரித்துள்ளனர்.

 

   அப்போது தான், தான் கணவர் வெளிநாட்டில் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு பல ஆண்களுடன் பழகி வந்ததையும் அதற்கு மகள் இடையூறாக இருந்ததையும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து இடையூறாக இருந்த தனது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் அவள் தெரிவித்துள்ளாள். இதனை கேட்டு அதிர்ந்த போலீசார் பிரியங்காவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.