என் கணவரின் அந்த உறுப்பை காணோம்! காவல் நிலையத்தில் கதறிய பெண்! அதிர்ந்த போலீஸ்!

தனது கணவரின் அந்த உறுப்பை காணவில்லை என்று பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அதிர வைத்துள்ளது.


சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்லம். இவர் அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு வசித்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவு வீட்டில் இருந்து புறப்பட்டவர்கள் மீண்டும் வரவில்லை. அவரை பல இடங்களில் தேடிய போது ரெட்டேரி அருகே மயங்கிய நிலையில் அஸ்லம் கிடந்துள்ளார்.

அவரது அந்த உறுப்பு கொடூரமாக அறுக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு கீழ்பாக்கம் மருத்தவமனையில் அனுமதித்தனர். இதனிடையே தனது கணவரின் அந்த உறுப்பை காணவில்லை என்று கொளத்தூர் காவல்நிலையில் அவரது மனைவி புகார் அளித்தார். 

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தனது உறவினர்களுடன் அந்த பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தனது கணவரின் அந்த உறுப்பை அகற்றியவர்களை கைது செய்ய வலியுறுத்தினார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே அஸ்லம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த தகவலை கேட்டு அவரது மனைவி கதறி அழுதார். எதற்காக அஸ்லம் அந்த உறுப்பை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது.