ஒரே ஒரு செல்ஃபி! ஒற்றை வார்த்தை! திமுக தொண்டர்களை சிலிர்க்க வைத்த உதயநிதி!

ஒரே ஒரு செல்ஃபி எடுத்ததுடன் அதனை ட்விட்டரில் வெளியிட்டு ஒற்றை வார்த்தையில் ஒரு பதிவை வெளியிட்டு திமுக தொண்டர்களை சிலிர்க்க வைத்துள்ளார் உதயநிதி.


சென்னை ஹில்டன் ஹோட்டலில் இன்று திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து சரியாக 464 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர்.

இளைஞர் அணி செயல்பாடுகள், மாநாடுகள் மற்றும் நிர்வாக முறைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் சுமார் 30லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்கிற இலக்கை உதயநிதி முன் வைத்தார். மேலும் இளைஞர் அணியினர் தண்ணீர் தொடர்புடைய பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கேட்டுக் கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகள் அனைவரையும் கீழே அமர வைத்து மேடையில் ஏறி உதயநிதி ஒரு செல்ஃபி எடுத்தார். அந்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த உதயநிதி, குடும்ப அரசியல் என்பார்கள் ஆம் இது தான் என் குடும்பம் என்று பதிவிட்டிருந்தார்.

அதாவது திமுக நிர்வாகிகள் தான் தனது குடும்பம் என்கிற ரீதியில் அந்தட்வீட் இருந்தது. இதனை பார்த்து புல்லரித்துப் போன உடன்பிறப்புகள் சிலிர்த்துப் போய் சில்லறையை அள்ளி வீசி வருகின்றனர்.