பெண்கள் குட்டை பாவாடை அணிந்து வந்தால் சம்பள உயர்வு! பிரபல கம்பனி அதிரடி அறிவிப்பு!

ஸ்கர்ட்ஸ் எனப்படும் குட்டை பாவாடை அணிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் அறிவித்துள்ளது பிரபல நிறுவனம்.


ரஷ்யாவில் ஒரு முன்னணி  நிறுவனத்தில் அங்கு பணிபுரியும் பெண்கள் அதிக மேக்கப், மற்றும் ஸ்கர்ட் அணிந்து வந்தால் சம்பள உயர்வு வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் தாங்கள் பெறும் ஊதியத்தில் இருந்து தினமும்(1.19 பவுன்ஸ்) 104 ரூபாய் அதிகமாக வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் இந்த செயலானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. ரஷ்யாவைச் சேர்ந்த டாட்ப்ரூஃப்  நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்கள் ஸ்கர்ட் அணிந்து கொண்டும், அதிகமாக மேக் அப்  செய்து கொண்டும் வந்தால் சம்பளத்திலிருந்து தினமும் 104 ரூபாய் உயர்வு என்று அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் 'பெமினிட்டி மாரத்தான்' என்னும் பிரச்சாரத்தை வரும் 30 தேதி வரை செயல்படுத்தவிருக்கிறது. அதனால் அந்த இந்த மாற்றத்தை  முன்னெடுத்துள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த பிரச்சாரத்தால் ஆண்கள் கூட்டத்தையும் அதிகரிக்கலாம் என்று  தகவல் தொடர்புத் துறையிலிருந்து அனஸ்டஸியா கிரிலொவா கூறியுள்ளார். மேலும் அதில் இந்த தொடக்கம் பெண்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

இதனால் அவர்கள் தங்களுடைய பெண்ணியத்தையும் உணர்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து தினமும் அலுவலகம் வரும் பெண்கள் தங்களை புகைப்படம் எடுத்து நிறுவனம் கொடுக்கும் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் அவர்களது பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஊதியத்திலிருந்து உயர்வு அழைப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட பெண்ணியவாதி ஸலினா மார்ஷன்குலொவா தன்னுடைய வலைதள பக்கத்தில் தவறான சிந்தனை என்கிற கோணத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பதிவிலும் அந்நிறுவனத்தின் தலைவரை டைனோசர், என்றும் 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.மற்ற நிறுவனப் பெண்களையும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்தத் தினமும் அவர்கள் அலுவலகம் சென்று தன்னைப் புகைப்படமெடுத்து தாங்கள் கொடுத்துள்ள எண்ணிற்கு அனுப்பி வைத்தால் அன்றைய நாளுக்கான பணம் அளிக்கப்படும் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.