அடப்பாவமே... போஸ்டரையுமா காப்பி அடிப்பார் ஏ.ஆர்.முருகதாஸ்..? ரஜினிக்குத்தான் அவமானம்!

முருகதாசும் காப்பியும் , செல்லூர் ராஜுவும் அறிவியலும் போல எபோதுமே ரொம்ப நெருக்கம்.


கஜினியை விடுங்கள், கத்தி வந்தபோது இது என்கதை ,என்கதை என்று மீஞ்சூர் கோபியை கத்திக் கதற விட்டார்.அதில் வரும் சண்டைக்காட்சி கூட சுட்டதுதான் என்றார்கள்.அவர் கவலைப்படவில்லை.அடுத்தது சர்க்கார்,அதிலும் வருண் ராஜேந்திரன் என்கிற உதவி இயக்குநர் கதையைத் திருடி சிக்கினார்.இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி , நயன்தாரா என்று பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து 2020 பொங்கல் ரிலீசைக் குறிவைத்து தர்பார் படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

அடுத்தவர்கள் கதையை ,படத்தை சுட்டாவது தன் படத்தில் பல திடுக்கிடும் திருப்பங்களை வைக்கும் முருகதாஸ் இந்த முறை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்ட்டர் முதலே காப்பியடிப்பதை துவக்கிவிட்டார்.அவர் ரஜினி ஆயுதக் குவியலுக்குள் இருந்தபடி சிரிப்பது போல வெளியிட்டிருக்கும் ஃபஸ்ட் லுக் கொஞ்சம்  ஓல்ட் லுக்தான்.அது ரன்வீர் சிங் நடித்த சிம்பா பட போஸ்ட்டரின் அப்பட்டமான காப்பி.

என்று சொல்லி முடிக்கும் முன்பே இல்லை அது அர்னால்டு நடித்த ஹாலிவுட் பட போஸ்ட்டரை சுட்டது என்று இன்னொரு தகவலும் வருகிறது. killing Gunther என்கிற 2017 ல் வந்த படத்தின் போஸ்ட்டரை  2019 ல் ஃபஸ்ட்லுக் என்று காட்டி ஏமாற்றுகிறார் முருகதாஸ்.ஒரு வேளை,ஆவரேஜ் ரஜினி ரசிகன் வயசு 40க்கு மேல் இருப்பதால் இணைய த்தில் பரவும் இது போன்ற செய்திகளை அவர்கள் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறாரோ.இப்போதே இப்படி என்றால்,இன்னும் டீசர்,ட்ரைலர் வரும்போது எத்தனை பூதங்கள் புறப்படுமோ.முருகதாஸ் என்றாலே ஒரு த்திரில் இருக்கத்தான் செய்கிறது.