ஐட்டத்துடன் காக்கி யூனிபார்மில் புதருக்குள் ஒதுங்கிய போலீஸ்! கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்!

சென்னை அருகே பள்ளிக்கரனையில் காக்கி யூனிபார்மில் போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொழில் செய்யும் திருநங்கையுடன் சாலையோர புதருக்குள் ஒதுங்கிய போது அப்பகுதி இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.


   சென்னை பள்ளிக்கரனை பைபாஸ் சாலையில் இரவு 11 மணிக்கு மேல் திருநங்களை ஏராளமானோர் திரண்டு பாலியல் தொழில் செய்வது வழக்கம். லாரி டிரைவர்களை குறி வைத்து அவர்கள் இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பேரம் பேசி ஓ.கே ஆன பிறகு சாலை ஓரம் உள்ள புதருக்குள் அழைத்துச் சென்று லாரி டிரைவர்களை குஷிப்படுத்தி திருநங்கைகள் அனுப்பி வைப்பர்.

   போலீசாருக்கு கொடுக்க வேண்டிய மாமூலை கொடுத்து திருநங்கைகள் பல ஆண்டுகளாக பள்ளிக்கரனை பை பாசில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது போலீசார் ரெய்டு வருவதும், திருநங்கைகளை கைது செய்துச் செல்வதும் கூட நடந்தேறும். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் காக்கி யூனிபார்மில் போலீஸ்கார் ஒருவர் அப்பகுதிக்கு வந்துள்ளார்.

   வந்த போலீஸ்காரர் அங்கு டூட்டியில் இருந்த திருநங்கை ஒருவரை அழைத்து பேசிக் கொண்டிருந்தார். இதனை அப்பகுதி இளைஞர்கள் சிலர் கவனித்துக் கொண்டிருந்தனர். சரி போலீஸ்காரர் யூனிபார்மில் வந்துள்ளார், திருநங்கைகளிடம் மாமூல் வாங்கிவிட்டு சென்றுவிடுவார் என்று இளைஞர்கள் கருதிக் கொண்டிருந்தனர். அப்போது, திருநங்கை ஒருவருடன் அருகாமையில் உள்ள ஒரு புதருக்குள் யூனிபார்முடன் காவலர் சென்றுள்ளார்.   இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் விரைந்து சென்று போலீஸ்காரர் யூனிபார்முடன் திருநங்கையுடன் புதருக்குள் இருப்பதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனை பார்த்து பதறிப்போன போலீஸ் காரர் ஆடைகளை பாதி போட்டும் போடாத நிலையிலும் வெளியே வந்தார். இருந்தாலும் விடாத இளைஞர்கள், அந்த போலீஸ்காரரை சூழ்ந்து கொண்டு யுனிபார்முடன் இப்படி செய்கிறாயே நியாயமா? என்று கேட்டனர்.   இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து கொண்டு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருநங்கைகள் விரட்டி விட்டு அந்த காவலை பள்ளிக்கரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த காவலர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தின் இரண்டாம் நிலை காவலர் சதீஷ் சத்தியராஜ்   என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.