கணவன் திட்டித் தீர்த்த்ததால் குழந்தைகளை கொன்றுவிட்டு மனைவி தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேட்க கூடாத கேள்வி கேட்ட கணவன்! 2 குழந்தைகளை கொலை செய்து தன் உயிரையும் மாய்த்த மனைவி!

சென்னை ராயலா நகர் கடந்த ஞாயிற்றுக் கிழமை உணர்ச்சிக் கொந்தளிப்பால் வாழக்கையை முடித்துக்கொண்ட ஒரு சோக முடிவைச் சந்தித்தது. ராயலா நகரைச் சேர்ந்த செந்தாமரை என்பவர் அரும்பாக்கத்தில் கணினி மையம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி அபிதா. நாராயணன் மற்றும் மகாலட்சுமி என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இனிய குடும்பத்தை இன்னாத கூறல் சிதைத்துவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணினி மையத்தில் வேலை செய்துகொண்டிருந்த செந்தாமரை தனது மனைவிக்கு போன் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் வெகுநேரம் ஆகியும் போன் எடுக்கப்படாததால் பதற்றம் அடைந்த செந்தாமரை வீட்டுக்கு விரைந்தார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டுக்குள் மனைவி அபிதாவும் இரு குழந்தைகளும் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வீட்டை சோதனையிட்ட போது அபிதா எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘தங்கள் மூன்று பேரின் மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்றும் தாங்களே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.
நாங்கள் இல்லாமல் இனி நீங்கள் யாரைத் திட்டுவீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்த அபிதா, நீங்கள் தனிமையில் இருந்தால்தான் எங்கள் அருமை உங்களுக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
உங்கள் தம்பி மற்றும் அவரின் மனைவியை நம்பாதீர்கள் என்று தெரிவித்திருந்த அவர், தங்களின் சாவுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தெரிவித்திருந்தார். நீங்கள் திட்டும்போதெல்லாம் எங்களுக்கு அவமானமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செந்தாமரையிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டதும், செந்தாமரை தனது மனைவி அபிதா மற்றும் குழந்தைகளை கடுமையாக திட்டியதும் தெரியவந்தது.
மன உளைச்சலில் இருந்த அபிதா இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ள போலீசார், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே மனைவி அபி
மீதான சந்தேகத்தால் தான் செந்தாமரை தொடர்ந்து அவரை திட்ட வந்ததாகவும் தான் தவறு
செய்யவில்லை என்று நிரூபிக்கவே அபி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக தற்கொலை
செய்து கொள்வதற்கு முன்னதாக காலையில் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் வீட்டில் இல்லாத நேரத்தில் யாரை வரவழைத்து படுக்கிறாய்? என்று கணவன்
செந்தாமரை கேட்டதாக சொல்லப்படுகிறது.
பெற்ற குழந்தைகள்
முன்னிலையில் கணவன் இப்படி கேட்டதால் மனம் உடைந்த மனைவி இந்த விபரீத முடிவை
எடுத்துள்ளார்.