கணவனின் 3வது மனைவியை போட்டுத் தள்ளிய 2வது மனைவி! உடலுறவு கொள்ள மறுத்ததால் கொடூரம்!

கணவனால் கைவிடப்பட்ட 2-வது மனைவி தன்னுடன் கணவன் உடலுறவு கொள்ளாத ஆத்திரத்தில் 3வது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.


கடந்த 1-ஆம் தேதி நலசோபாராவின் ஒதுக்குப் புறமான இடம் ஒன்றில் 35 வயதுப் பெண்ணின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது உடல் கிடந்த இடத்தின் அருகே ஜான்வி என பெயர் எழுதப்பட்ட ஆட்டோ ஒன்று நின்றிருந்தது தெரிய வந்தது.

சுமார்  4 ஆயிரம் ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்த பின் அந்த ஆட்டோவை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்டோ ஓட்டுரான நீரஜ் மிஸ்ராவிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் பார்வதி மானே என்ற பெண்ணுக்கு கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

பார்வதியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் சுஷில் மிஸ்ரா என்ற நபரின் 2-வது மனைவி என்று தெரிய வந்தது. சுஷிலின் முதல் மனைவி உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நிலையில் அவரது இரண்டு மகள்களும் அவருடனும் பார்வதியுடனும் வசித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு சுஷில் மிஸ்ரா யோகிதா தேவ்ரா என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். அது முதல் அவர் 2-வது மனைவிக்கும் முதல் மனைவியின் மகள்களுக்கும் பணம் தருவதில்லை என்றும், 2-வது மனைவையுடன் உறவு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 3-வது மனைவியின் முன்னிலையில் அவர்களை அவர் அவமானப் படுத்தியதையடுத்து 2-வது மனைவி பார்வதி ஆத்திரத்தில் இருந்தததாகக் கூறப்படுகிறது. அவர் தனது கணவனின் இரண்டு மகள்கள் மற்றும் மகள்களில் ஒருவரின் ஆண் நண்பனின் துணையுடன் யோகிதா தேவ்ராவைக் கொல்லத் திட்டமிட்டார்.

கடந்த வெள்ளிக் கிழமை சுஷில் ஒரு திருமணத்தில் பங்கேற்க வேறு ஊருக்குச் சென்ற நிலையில் அவரது வீட்டில் கள்ளச் சாவி மூலம் நுழைந்த நான்கு பேரும் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த யோகிதாவை கழுத்தை நெறித்துக் கொன்றனர். பின்னர் ஊடலை போர்வையால் சுற்றி உடல் நலம் சரியில்லாத பென்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நீரஜ் மிஸ்ராவின் ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.

ஒதுக்க்குப் புறமான் ஒரு இடத்தில் இறங்கி நீரஜ் மிஸ்ராவிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு பின்னர் உடலையும் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றது பார்வதியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.