பர்தா அணிந்து பெண்கள் டாய்லெட்டுக்குள் நுழைந்து ஆண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!

கோவாவில் பர்தா அணிந்துகொண்டு பெண்களின் கழிவறைக்குள் சென்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பனாஜி பேருந்து நிலையத்துக்குள் ஆண்கள், பெண்களுக்கென தனித் தனி கழிவறைகள் உள்ளன. இந்நிலையில் அந்த நகரத்தைச் சேர்ந்த 35 வயது நபரான விர்ஜில் போஸ்கோ ஃபெர்னாண்டசுக்கு பெண்கள் கழிவறைக்கு செல்லவும், அங்கு நடப்பவற்றையும் பார்க்கவும் ஆசை.

 

தனது முறைகெட்ட ஆசைக்கு செயல் வடிவம் கொடுத்தார் ஃபெர்னாண்டஸ். தான் அணிந்திருந்த ஆடைகளுக்கு மேல் பர்தாவை மாட்டிக் கொண்டு பெண்கள் கழிவறைக்குள் நுழைந்தார். அங்கு நடப்பவற்றையெல்லாம் பர்தாவுக்குள் மறைந்துகொண்டு ரசித்தாயிற்று.

 

கழிவறையில் இருந்த பெண்களுக்கும் உடன் இருப்பவர் ஆண்தான் என சந்தேகம் எழாததால் இயல்பாக தங்கள் கடன்களை முடித்துவிட்டு வெளியேறினர். எல்லாவற்றையும் ஆசை தீர பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்த போதுதான் சிக்கிக் கொண்டார் ஃபெர்னாண்டஸ்.

 

என்னதான் பர்தா அணிந்திருந்தாலும் அவரது ஆண் தனமான நடை உடை பாவனைகள் சந்தேகத்தை ஏற்படுத்த கடந்து சென்றவர்கள் சந்தேகத்துடன் கூர்ந்து கவனித்த போது பர்தாவின் அசைவுகளின் இடைவெளியில் ஃபெர்னாண்டஸ் அணிந்திருந்த டி ஷர்ட், ஜீன்சும், கால்களில் அணிந்திருந்த ஷூவும் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது

 

பிறகென்ன அவர்கள்  போலீசாரை அழைத்து தங்களது சந்தேகத்தைத் தெரிவித்ததையடுத்து போலீசார் அங்கு வந்து சோதனையிட்டனர். அப்போது பெண் போலவே தெரிய வேண்டும் என்பதற்காக தலையில் விக் உள்ளிட்ட அலங்காரங்களுடன் இருந்த விர்ஜில் போஸ்கோ ஃபெர்னாண்டஸ் சிக்கிக் கொண்டார்.

 

அவர் மீது பெண்போலவே ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விநோத ஆசையுடன் பெண்கள் கழிவறைக்கு சென்ற நபர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.