காதலை ஏற்க மறுத்த பெண் தோழி! ஆத்திரத்தில் சாலையில் சென்ற 5 பேரை கத்தியால் குத்திய காதலன்!

பெண் தோழி காதலை ஏற்காமல் இகழ்ந்த ஆத்திரத்திலும் குடிவெறியிலும் தெருவில் சென்ற 5 பேரை கத்தியால் சரமாரியாகக் குத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹிருத்திக் என்ற சோமேஷ் விலாஸ் பரட்டே என்ற அந்த நபரை கைது செய்த போலீசார், கத்திக்குத்தால் படுகாய அடைந்த ராஜுநந்தன்வர், ஜிதேந்திர மொஹாதிகர், ரமேஷ் நிகாரே, பிரதீஷ் காப்ரே, ஷெகாவத் அன்சாரி என்ற 5 பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஹிருத்திக்கிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஹிருத்திக்கும் பெண் தோழியும் ஒரே கல்லூரியில் பயின்றதும், குடும்ப வறுமை காராணமாக பெண் தோழி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றதும் தெரியவந்தது. தோழிக் கல்லூரிக்கு வராததால் மன்முடைந்து குடிபழக்கத்துக்கு ஆளானதாகத் தெரிவித்தான் ஹிருத்திக். அவன் குடிபழக்கத்துக்கு ஆளானதால் தோழி அவனிடம் இருந்து விலகத் தொடங்கினாள். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தோழியைச் சந்தித்த ஹிருத்திக், அவளிடம் தன் காதலைச் சொல்ல, அவள் அதனை மறுத்து அவனை திட்டியதாக அவன் தெரிவித்தான். இதனால் அவன் அவளைத் தாக்கியதையடுத்து அவள் அவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள். 

இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் தோழியைச் சந்தித்து காதலைச் சொல்ல, அவள் மீண்டும் அதனை மறுத்து திட்டி அனுப்பியதையடுத்து ஆத்திரத்தில் இருந்த அவன் நன்றாக மது அருந்திவிட்டு தெருவில் சென்றுகொண்டிருந்தவனின் வெறி அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கித் திரும்ப அனைவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியது தெரியவந்தது.