குரோம்பேட்டையில் பூர்விகா கடையில் புதிதாக வாங்கி இயங்காத புதிய செல்போனை கடைகாரர்கள் சீர் செய்து தர மறுத்ததால் ஆத்திரத்தில் சாலையில் போட்டு கொளுத்திய வாடிக்கையாளர்.
பூர்விகா கடை முன்பு ரூ.17000 மதிப்பு புத்தம் புது செல்போனை போட்டு தீ வைத்த வாடிக்கையாளர்! அதிர வைக்கும் காரணம்!

சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் பூர்விகா செல்போன் விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு நடுத்தர வயது வாடிக்கையாளர் ஒருவர் இன்று பிற்பகலில் வருகை தந்தார். உள்ளே சென்று ஊழியர்களுடன் சிறிது நேரம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கடை ஊழியர் அந்த வாடிக்கையாளரை வெளியே விரட்டி அடித்தார்.
மிகுந்த கோபத்துடன் அந்த வாடிக்கையாளர் பூர்விகா விற்பனை கடையில் இருந்து புறப்பட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்த வாடிக்கையாளர் மீண்டும் பூர்விகா செல்போன் விற்பனை கிடைக்க வருகை தந்தார். அப்போது தான் கையோடு வைத்திருந்த புத்தம் புதிய வீவோ செல்போன் ஒன்றை எடுத்து பூர்விகா கிடைக்கும் முன்பு போட்டு பெட்ரோல் ஊற்றி னார். சிறிதும் தாமதிக்காமல் அவர் அதனை லைட்டர் கொண்டு கொளுத்திவிட்டு பூர்விகா கடையை நோக்கி சாபமிட ஆரம்பித்தார்.
இதுகுறித்து அந்த நபரிடம் பேசிய போது தான் தாம்பரத்தைச் சேர்ந்தவர் என்றும் தனது மகன் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அவனுக்கு பரிசாக வழங்க வீவோ செல்போன் ஒன்றை 17,000 ரூபாய் கொடுத்து குரோம்பேட்டை பூர்விகாவில் வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் செல்போனில் சிம் கார்டை ஒருத்தி ஆன் செய்தால் இயங்கவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை பூர்விகா விடம் வந்து முறையிட்டும் தன்னை அவர்கள் அலட்சியம் செய்ததாக கூறுகிறார்.
இதனால் பூர்விகா கடையில் செல் போன் வாங்கினால் இப்படி நாம் தீயில் போட்டு தான் கொடுத்த வேண்டிய நிலை வரும் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தவே இப்படி செய்ததாக கூறி விட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார். என்ன ஆனது என்று பூர்விகா விடம் விசாரித்தபோது நான்கு மாதங்களுக்கு முன்பு வாங்கிய செல்போனை தற்போது வந்து செயல்படவில்லை என்று அவர் கூறியதாகவும் vivo சர்வீஸ் சென்டருக்கு செல்லுமாறு கூறிய அவர் செல்லாமல் இங்கு வந்து தகராறு செய்ததாகவும் கூறிவிட்டு சென்றனர்.
இருந்தாலும் ஒருவர் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்போனை ஒரு கடைக்கு முன்பு போட்டுக் கொள்கிறார் என்றால் அவர் எந்த அளவிற்கு நொந்து போயிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.